Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, October 19, 2012

மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் மரணம் நீர்கொழும்பில் சம்பவம்


மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் மரணமாகியுள்ளதாகவும் குறித்த பெண்ணின் பிள்ளைகள் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில  இடம் பெற்றுள்ளது.

நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தை சேர்ந்த சீனத்துல் ஜிப்ரியா என்ற 42 வயதுடைய பெண்ணே மின்சாரம் தாக்கி மரணமானவராவார். அவரது பிள்ளைகளான முகம்மத் மின்னார் (13வயது) மகளான பாத்திமா முனீரா ஆகியோரே காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.


குறித்த சிறுவன் வீட்டின் மேல் மாடிக்கு சென்று தொலைக்காட்சி
அண்டனாவை வைக்க முயன்றுள்ளான். இதன் போது அண்டா கம்பி சரிந்து வீட்டின் முன்பாக செல்லும் மின்சார வயர்களின் மேல் விழுந்துள்ளது. இதனை அடுத்து மின்சாரம் தாக்கி சிறுவன் வீசப்பட்டு  கீழே விழுந்துள்ளான். இதன் போது சிறுவனின் சகோதரியும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் சிறுவனின் தாயார் மகனை காப்பாற்ற ஒடி வந்து  அண்டனா கம்பியை தொட்ட போது அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இந்நிலையில் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறுவனின் தாயார் வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment