Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, October 19, 2012

நீர்கொழும்பு வாலிப குற்றவாளிகள் சீர்திருத்த நிலைய கைதிகளின் நலன்புரி நிகழ்வு


நீர்கொழும்பு பல்லன்சேனை வாலிப குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் உள்ள இளம் குற்றவாளிகளின் உறவினர்களுடனான சந்திப்பு மற்றும் பாடசாலை, கைப்பந்தாட்டத்திடல், பௌத்த வழிபாட்டு நிலையம்; ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் வாலிப குற்றவாளிகள் சீர்திருத்த
நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சர் சந்ரசிறி கஜதீர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஸனி பெர்னாண்டோ புள்ளே,புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பி.டப்ளியூ. கோடிபிலி, வாலிப குற்றவாளிகள் சீர்திருத்த நிலைய அதிகாரி செனரத் சேனாநாயக்க ,உட்பட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், நலன்புரி சங்க உறுப்பினர்கள்,  கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.


அமைச்சர் சந்ரசிறி கஜதீர பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஸனி பெர்னாண்டோ புள்ளே ஆகியோர்  பாடசாலை, கைப்பந்தாட்டத்திடல். பௌத்த வழிபாட்டு நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

 இந்நிகழ்வில் சீர்திருத்த நிலையத்தில் உள்ள இளம் குற்றவாளிகளின் விளையாட்டு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.





















No comments:

Post a Comment