Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, December 18, 2013

எரிபொருள் மானியம் வழங்காமை மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பத்திரிகையாளர் மாநாடு

 அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி  தொடர்ச்சியாக எரிபொருள் மானியம் வழங்காமை மற்றும் மீனவர்களின் எதிர்நோக்கம் பிரச்சினைகள் தொடர்பாக பத்திரிகையாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை 17-12-2013   மாலை நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள சென் மேரிஸ் தேவாலயத்தின் ஜுப்பலி மண்டபத்தில்
நடைபெற்றது.

இலங்கை மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் பல்வேறு மீனவ அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி  தொடர்ச்சியாக எரிபொருள் வழங்காமையினால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வருடம்  ஐந்து மாதங்களே எரிபொருள் மானியம் வழங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக சிறு மீன் பிடித்துறை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

கடற்றொழில் பிரதி அமைச்சர் நீர்கொழும்பைச் சேர்;ந்தவராக இருந்த போதும் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை எனவும், கடற்றொழில் பிரதி அமைச்சர் ஊடகங்களில் தெரிவிப்பது போன்று மீன்பிடி உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படவில்லை எனவும், உபகரணங்களை விற்பனை செய்பவர்கள் தாம் நினைத்த விலையில் அதனை விற்பதாகவும் கட்டுப்பாட்டு விலை என்று ஒன்று இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எமது நாட்டைச் சேர்ந்த 120 இற்கு மேற்பட்ட மீனவர்கள் தமிழ் நாட்டு சிறைச்சாலைகளில் இருப்பதாகவும், அவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் ஆக்கப்பூர்வமான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஆயினும் அத்து மீறி எமது கடல் பகுதிக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவதாவும் மீனவர் சங்கத் தலைவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.


இந்திய மீனவர்கள் எமது நாட்டு கடல் வளங்களை சூறையாடுவதாகவும், தினமும் 100 இற்கு மேற்பட்ட சிறிய, பெரிய படகுகள் எமது கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்;பதாகவும், கத்தேலிக்க திருச்சபை நீர்கொழும்பு மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். விரைவில்  மீனவர்களின் பாரிய ஆர்ப்பாட்டம் நீர்கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது.







No comments:

Post a Comment