ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான வல்லாப்பட்டையுடன் இந்தியப் பிரஜை ஒருவரை நீர்கொழும்பு ஏததுக்காலை பிரதேசத்தில்
உள்ள விக்டோரியா ஓய்வு விடுதியில் வைத்து
நீர்கொழும்பு குற்றத்தடுப்பு
பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் கோபால் நகரைச் சேர்ந்த தாலிப் உத்தீன் என்ற 56 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ள இவர்
ஐந்து கிலோகிராம் கொண்ட வல்லாப்பட்டையை நான்கு பொதிகளாக கட்டி
வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகேயின் ஆலோசனையின்
பேரில் நீர்கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரசன்ன
பிரியதர்ஸனவின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ்
சார்ஜன்களான எம்.எல்.எம். ரஹுப்> செனவிரத்ன> சுகத் குணவர்தன> ஹேரத் மற்றும் கான்ஸ்டபிள்
பிட்டிகலை ஆகியோரைக் கொண்ட குழுவினர்
சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு வல்லாப்பட்டையையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment