நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி நீர்கொழும்பு வலய கல்விக்
காரியாலயத்திற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுச்; சென்ற பி.சி.பி. பெர்னாந்துவிற்கான பிரியாவிடை நிகழ்வு திங்கட்கிழமை (24-2-2014) நீர்கொழும்பு கோட்ட
அலுவலகத்தில் நடைபெற்றது.
இதனை நீர்கொழும்பு கோட்ட கல்வி
அலுவலகத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நிவ்ஸ்டட் மகளிர்
கல்லூரி மாணவிகள் கோட்டப் பாடசாலைகளுக்கான கீதத்தை இசைத்தனர்.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. ஏ.சி. பெர்னாந்து> நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஏ.ஏ. மைக்கல் நீர்கொழும்பு கோட்ட ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
ஆசிரிய ஆலோசகர்கள்>
பிரியாவிடை பெற்றுச் செல்லும் கல்வி அதிகாரி;; ஆகியோர் உரையாற்றுவதை படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment