Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, March 21, 2014

தமிழ் மக்களின் ஒரே ஆயுதம் வாக்குச் சீட்டுக்கள் மாத்திரமே - ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்

 வரலாற்றில் முதல் தடைவையாக கம்பஹா மாவட்ட தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை மாகாண சபைக்கு தெரிவு செய்யவுள்ளனர். தமிழ் மக்களின் ஒரே ஆயுதம்  வாக்குச் சீட்டுக்கள் மாத்திரமே ஆகும்.  தமிழ் மக்கள் வாக்குச் சீட்டுக்களைப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியில் எங்களது பிரதிநிதிகளை  மாகாண சபைக்கு தெரிவு செய்து அனுப்ப வேண்டும் என்று  ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.


ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான ஜெரம் விக்னேஸ்வர்ம்,சசிகுமார், விஜயேந்திரன்,சஜீவானந்தன்,சுரேஸ் கண்ணா. திருச் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவதற்காக நீர்கொழும்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை (21-3-2014) முற்பகல் இடம்  பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆதற்கு முன்னதமாக கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள கோயில்களில் இடம்பெற்ற விடே பூஜை வழிபாடுகளிலும் மனோ கணேசன் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும்  கலந்து கொண்டனர். அதன்போது விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் என். கணேசலிங்கம் மனோ கணேசனை கோயில் வாயிலில் மலர் மாலை அணிவித்து வரவேற்றார்.






  அதன் பின்னர் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அங்கு தொடர்ந்து உரையாறறகையில் குறிப்பிட்டதாவது
வத்தளையிலிருந்து நீர்கொழும்பு வரையும் மற்றும் பேலியாகொடை, கட்டானை, கொச்சிக்டை எட்பட சகல பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை கம்பஹா மாவட்டத்தில் வாழும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் புரிந்து வைத்திருப்பார்கள் என நம்புகிறேன்.
தமிழ் மக்களின் விருப்பவாக்குகளைப் பெற்று மக்களை ஏமாற்றி வந்த சிலருக்கு இது கசப்பானதாக இருக்கலாம். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இம்முறை ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து தெரிவு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

நான் கம்பஹா மாவட்டதிற்கு மட்டுமல்ல  மேல் மாகாணத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டு தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவன்.
எமது ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க  வேண்டும். அனைவரும் காலையிலேயே வாக்களிப்பு நிலையத்pதற்கு சென்று வாக்களித்து எமடது கட்சிக்கு வாக்களிக வேண்டும்.






No comments:

Post a Comment