Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, April 1, 2014

நீர்கொழும்பு போலவலானையில் ஒருவர் வெட்டிக் கொலை

நீர்கொழும்பு போலவலானையில் இனந்தெரியாதவர்களால் நடுத்தர வயதுடைய நபர் ஒருவர்  கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்படவரின் சடலம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு - போலவலானை. வேபட வீதியைச் சேர்ந்த  மானமுதலிகே லால் பிரியன்த அப்புஹாமி என்ற 45 வயதுடைய திருமணமாகாத நபரே
சடலாமாக மீட்கப்பட்டவராவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (30-3-201) இரவு 11 மணியளவில் கொலை செய்யப்பட்ட நபர் தான் வளர்க்கும்  மாட்டுக்;கு உணவு வழங்கிக் கொண்டிருப்பதை சிலர் கண்டுள்ளனர். இந்நிலையில் திங்கட்கிழமை காலையில்  படுகொலை  செய்யப்பட்ட நிலையில்  சடலம் இருப்பதை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கண்டு  பொலிஸ் அவசர பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment