சீதுவையில் உள்ள தனியார் வங்கியொன்றை இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நால்வர்
இன்று திங்கட்கிழமை (31)
அதிகாலை 2.30 மணியளவில்
கொள்ளையிட்டுள்னர்.
லியனகே முல்லை, 18 ஆம் கட்டையில்
அமைந்துள்ள 24 மணிநேரம் சேவையில் ஈடுபடும்.,
கொமர்ஷல் வங்கியிலேயே
இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளாதாக சீதுவை
பொலிஸார் தெரிவித்தனர்.
தலைக்கவசத்தால் முகத்தை மூடி வந்த
நால்வரே பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் துப்பாக்கி
மற்றும் கத்தி என்பவற்றை கொள்ளைச்
சம்பவத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். கொள்ளையர்கள் வங்கி முகாமையாளரை கத்தியால் குத்திவிட்டு பணத்தை
கொள்ளையிட்டுள்ளனர். குறித்த தனியார் வங்கியிலிருநது 14 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட
தொகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
படுகாயமடைந்த முகாமையாளர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment