Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, March 31, 2014

ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து தேர்தலில் வெற்றி


நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடை மற்றும்  வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றில்; கடந்த பெப்ரவரி மாதம் 17  ஆம் திகதி இடம்பெற்ற  இரண்டு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் கொள்ளையிடப்பட்ட   சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள  ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து மேல் மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளார்.
 ரொயிஸ் விஜித்த பெர்னாந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சாரபில்மேல் மாகாண சபையில் கம்பஹா
மாவட்டத்தில்  போட்டியிட்டு 29 ஆயிரத்து 291 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.   இவர் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சிபிரதான அமைப்பாளரும், நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவருமாவார். 
இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியிலிருந்து  போட்டியிட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் நிமல்லான்ஸா ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 661 வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்று மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளார்.
அத்துடன், முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியிலிருந்து கம்பஹா மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக  போட்டியிட்ட  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் மூன்றாவது முறையாகவும் மாகாண சபைக்கு தெரிவாகியள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் சாரபில்கம்பஹா மாவட்டத்தில்   கட்டானை தேர்;தல் தொகுதியிலிருந்து போட்டியிட்ட  முன்னாள்  மேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோஸ் பெர்னாந்து 29 ஆயிரத்து 267 விருப்பு வாக்குளைப் பெற்று மாகாண சபைக்கு தெரிவாகியள்ளார்.


No comments:

Post a Comment