Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, March 30, 2014

மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் - 2014


நேற்று  சனிக்கிழமை (29-3-2014) நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  கம்பஹா. களுத்துறை மற்றும் கொழும்பு  ஆகிய மூன்று மாவட்டங்களயிலும்  54 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

 இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சி மேல் மாகாண சபைத் தேர்தலில் 28 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. சரத் பொன்சேகா தலைமையிலான
ஜனநாயகக் கட்சி 9 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், ஜே.வி.பி. 6 ஆசனங்களையம்,  மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி 2 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

மேல் மாகாண சபைத் தேர்தலில் மூன்று மாவட்டங்களிலும் கட்சிகள் பெற்ற வாக்குகளையும்  ஆசனங்களையும் பார்ப்போம்.


கம்பஹா மாவட்டம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 582,668 வாக்குகளைப் பெற்று 23 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 249,220 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜனநாயகக் கட்சி 88,557 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜே.வி.பி. 56,405 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17,296 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.


களுத்துறை மாவட்டம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 337,924 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 144,924 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜனநாயகக் கட்சி 43,685 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜே.வி.பி. 25,366 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.


கொழும்பு மாவட்டம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 443083 வாக்குகளைப் பெற்று 18 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 285538 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜே.வி.பி. 74,437 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

ஜனநாயகக் கட்சி 71,525 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜனநாயகக் மக்கள் முன்னணி 44,156 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20,163 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைப்; பெற்றுக்கொண்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15,491 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.


கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 28,763
ஐக்கிய தேசிய கட்சி 22,687
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-3,943
ஜனநாயக கட்சி 3,294
மக்கள் விடுதலை முன்னணி 2,330
ஜனநாயக மக்கள் முன்னணி 1,388

No comments:

Post a Comment