Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, March 27, 2014

ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவை கைது செய்து தடுப்;புக் காவலில் வைத்துள்ளமையை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் - எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க

 நீர்கொழும்பு நகை கடையொனறில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றமை தொடர்பாக   எமது வேட்பாளரும் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளருமான  ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யாமல் தடுப்;புக் காவலில் வைத்துள்ளமை மனித உரிமை மீறல் செயலாகும். இதை நாங்கள் சும்மாவிடப் போவதில்லை. சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி தேரத்ல் பிரசாரக் கூட்டம் நீர்கொழும்பு மாநகர சபையின் லெய்ட்டன் மைதானத்தில்  இன்று புதன் கிழமை (26-3-2014) மாலை இடம்பெற்ற போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
இந்த பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய,பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ஹரீன் பெர்னாந்து,  கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர்கள்; ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவின் மனைவி ரேகா மற்றும் கட்சி முக்கியஸ்த்தர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.






எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவை நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டியது அவசியமாகும். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் ஒரு வேட்பாளர். மன்றில் ஆஜர்படுத்தப்படாமல் தடுப்புக்காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமாகும். பொலிஸார் இங்கு சட்டத்தை மீறியுள்ளனர். போதைப் பொருள் விற்பனை செய்யும் அரசியல்வாதிகளை ஏன் கைது செய்வதில்லை என்று கேட்க விரும்புகிறேன்.



தேர்தலில் எமது கட்சிக்கு வாக்களித்து ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவை மாகாண சபைக்கு தெரிவு செய்வதன் மூலம் மக்கள் இதற்கு நல்ல பதில் வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment