ஹோமியோபதி கவுன்ஸிலின் ஏற்பாட்டில் வெலிசறை ஹோமியோபதி வைத்தியசாலை,
இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்துடன்; இணைந்து
நடத்திய இலவச ஹோமியோபதி வைத்திய சிகிச்சை முகாம் நீர்கொழும்பு
பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில் இன்று
சனிக்கிழமை (22-3-2014) காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது.
வெலிசறை ஹோமியோபதி வைத்தியசாலையின் வைத்தியர் சாந்தனி ஹேரத் மற்றும் ஹோமியோபதி
வைத்தியர்களான திருமதி ஹபீஸா சகீல். திருமதி பரீனா. முஹம்மத் பயாஸ். நிமால் லீட்டர்ஸ் ஆகியோர் இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை
அளித்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்தியர் சாந்தனி ஹேரத் ஹோமியோபதி
லைத்தியம் தொடர்பாக விளக்கமளித்தார்.
பிரதேசத்தைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இலவச ஹோமியோபதி
சிகிச்சை முகாமில் பங்குபற்றி பயனடைந்ததாக
ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment