Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, August 9, 2014

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை முன்பாக மரண மஞ்சள் கோட்டுக் கடவையும் சட்ட வேலிகளும்

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை முன்பாக  உள்ள  மஞ்சள் கோட்டுக் கடவை விபத்துக்கள் ஏற்படும் அபாயகரமான இடமாக இருப்பதாகவும், அதேபோன்று வீதியின் நடுவில் அமைக்கப்பட்டள்ள வேலிச் சட்டங்களின்; உடைந்த பகுதியினூடாக வீதியை மாறுவதற்கு பாதசாரிகள் முற்படுவதால்; விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பாக பொது மக்கள் சிலர் தெரிவக்கையில்,

வைத்தியசாலையின் முன்பாக நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் இரண்டு மஞ்சள் கோட்டுக் கடவைகள் காணப்படுகின்றன.. ஒரு கடைவை  நடுவீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட வேலியைக் கொண்டு மூடப்பட்டுள்ளது.  வைத்தியசாலையின் பிரதான வாயிலின் முன்பாக கடந்த ஒருவருடத்திறகு முன்பாக அமைக்கப்பட்ட  மஞ்சள் கோட்டுக் கடவை விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயகரமான இடமாக உள்ளது. கொழும்பு திசையிலிருந்து வரும் வாகனங்கள்  'யூ' வளைவினூடாக வைத்தியசாலைப் பக்கமாக திருப்பவதற்கும் புதிய மஞ்சள் கோட்டுக்கு அருகல் உள்ள இடத்தை பயன்படுத்துகின்றன. முன்னர் பயன்படுத்திய புதிய மஞ்சள் கோட்டுக்கு  அருகில் உள்ள பழைய  மஞ்சள் கோட்டுக் கடவையை மீண்டும் செயல்படுத்துவதே பொருத்தமானதாகும். அதுவே பாதுகாப்பானதாகும்.

புதிய மஞ்சள் கோட்டுக் கடவை 


                      பழைய மஞ்சள் கோட்டுக் கடவை

அதேபோன்று, வீதியை இரண்டாகப் பிரிக்கும் வகையில் அமைக்கப்பட்டள்ள வேலிச் சட்டங்களின்; உடைந்த பகுதியினூடாக பலர் வீதியை  அவசரமாக மாறுவதற்கு பயன்படுத்தி விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர். அண்மையில் வயோதிபப் பெண் ஒருவர் வேனில் மோதி மரணமானார். வாகன சாரதிகளும் இதன்காரணமாக அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.



எனவே, இந்த  இரண்டு விடயங்களையம் கருத்திற்கொண்டு  உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேணடும் என்பதே சகலரதும் வேண்டு கோளாகும்.;


No comments:

Post a Comment