நீர்கொழும்பு மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்; 10 மேலதிக வாக்குகளால் கடந்த வியாழக்கிழமை நிறைவேறியது.
மேயர் அன்டனி ஜயவீர தலைமையில் சபை அமர்வு இடம்பெற்றது. அடுத்த ஆண்டுக்கான
உத்தேச வருமானம் 596.7 மில்லியன் ரூபா எனவும், உத்தேச செலவினம் 596.3 மில்லியன் ரூபா எனவும்,
வரவு செலவுத்
திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போது மேயர் தெரிவித்தார்.
பின்னர் வாக்களிப்பு இடம்பெற்றது. ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த
இரு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் வாக்களிப்பின் போது ஆளும் தரப்பு
உறுப்பினர்கள் 14 பேருடன் இணைந்து முஸ்லிம்
காங்கிரஸ் உறுப்பினர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் வகையில் எதிர்த்து வாக்களிக்குமாறு தமது
உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி எழுத்து மூலம் அறிவித்தும் மற்றும் ஆலோசனை
வழங்கியிருந்த போதும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களில் நால்வர் சபையில்
அமர்ந்திருந்த நிலையில்; வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஒன்பது பேரில் ஐவர் மாத்திரம் எதிர்த்து
வாக்களித்தனர்.
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களான
கெலிஸன் ஜயகொடி, கிஆன் பெர்னாந்து,
என்ரி ரொசைரோ,
சங்கீத் பெரேரா,
தயான் பெர்னாந்து
ஆகியோரே எதிர்த்து வாக்களித்தவர்களாவர்,
சஜித் மோகன்,
முகமம்மத் நஸ்மியார்,
நிசாந்த பெர்னாந்து
ஆகியோரே சபையில் அமர்ந்திருந்த போதும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்களாவர்.
இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தை மேயர்
அன்டனி ஜயவீர சமர்பித்து உரையாற்றியதை அடுத்து,
ஐக்கிய தேசிய கட்சி
உறுப்பினர்களான கெலிஸன் ஜயகொடி, கிஆன் பெர்னாந்து, என்ரி ரொசைரோ ஆகியோர்
உரையாற்றினர்.
இறுதியில் 10 மேலதிக வாக்குளால் அடுத்த
ஆண்டுக்கான வரவு செலவுத்தி திட்டம் சபையில் நிறைவேறியது.
No comments:
Post a Comment