நீர்கொழும்பு
நகரில் அமைந்துள்ள நகை மற்றும் வெளிநாட்டு
நாணயமாற்று முகவர் நிலையமொன்றில் ஆயுத முனையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம்
தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவிற்கு பிணை வழங்க
விதிக்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகளை தளர்த்;துமாறு கோரி சந்தேக நபரின் சார்பில் விடுக்கப்பட்ட
கோரிக்கையை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.வி. கருணாதிலக்க கடந்த செவ்வாய்க்கிமை
(16) நிராகரித்தார்.
மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து
ஒரு கோடி ரூபா வங்கிப் பிணையிலும் பத்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் மூன்று
நபர்களின்; (நெருங்கிய உறவினர், அரசாங்க ஊழியர், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர்)
சரீரப்பிணையிலும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த 8 ஆம் திகதி (8-12-2014) விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டார்.
இதுதவிர
மாதத்தில் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு குற்றத்தடுப்புப் பொலிஸ்
பிரிவிற்குச் சென்று காலை 9 மணி முதல் 12 மணி வரையான காலப்பகுதியில் கையொப்பமிட வேண்டும்
எனவும் நீதிபதி என்.வி. கருணாதிலக்கிவினால் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து உத்தரவிடப்பட்டார்.
இந்த
கடும் பிணை நிபந்தனை கோரிக்கையை
தளர்த்துமாறு வேண்டி விடுக்கப்பட்ட
கோரிக்கையை அரச சட்டத்தரணிகள்
மன்றில் ஆட்சேபித்தனர். இதளை
அடுத்தே நீதிபதி பிணை நிபந்தனைகளை தளர்த்த விடுக்கப்பட்ட கோரிக்கையை
நிராகரித்தார்.
No comments:
Post a Comment