Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, December 19, 2014

ரொயிஸ் விஜித்த பெர்னாந்து விடுதலையானார்: நகரெங்கும் பெருவரவேற்பு

நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள நகை மற்றும்  வெளிநாட்டு நாணயமாற்று முகவர் நிலையமொன்றில் ஆயுத முனையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவிற்கு கடந்த  வியாழக்கிழமை (18) தன்மீது விதிக்கப்பட்ட கடும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றி பிணையில் (பிற்பகல் 2 மணியளவில)விடுதலையானார்.



 மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து ஒரு கோடி ரூபா வங்கிப் பிணையிலும் பத்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் மூன்று நபர்களின்; (நெருங்கிய உறவினர், அரசாங்க ஊழியர், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர்) சரீரப்பிணையிலும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த 8 ஆம் திகதி (8-12-2014)
 விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டிந்தார். இந்நிலையில் பிணை நிபந்தனைகளை தளர்த்துமாறு அவர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், கடும் பிணை நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.






இதுவேளை, நீதிமன்ற வாயிலில் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி மாலை அணிவித்து அவரை வரவேற்றனர்;.

அங்கு ஊடகங்களுக்கு  மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து  கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,






 பத்து மாத காலத்தின் பின்னர் பிணையில் விடுதலையாகி இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். நான் நிரபராதி. நாள் நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்;ள நிலையில் நான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளளமை நன்மைக்கேயாகும். இந்த தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றி பெறுவார். நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு  படுதோல்வி அடையும்.  நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.



  நீதிமன்றில் இருந்து வெளியேறிய மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து பின்னர்  சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டார். நகரின் பல இடங்களில் அவருக்கு  ஆதரவாளர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment