பௌத்த மதகுருமாரை கொலை செய்த, பொதுமக்களை குண்டுகள் வைத்து படுகொலை செய்த கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு இந்த அரசாங்கம
பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. ஆயினும,;
என்ன குற்றச் செயலை செய்ததற்காக பயங்கரவாத
தடுப்புச் சட்டத்தின் என்னை தடுத்து வைத்திருந்தது? என்னிடம் ஆயுதம்
கைப்பற்றப்படவில்லை.
கொள்ளை சம்பவம் தொடர்பான பணமோ வேறு
பொருட்களோ கைப்பற்றப்படவில்லை. அப்படியானால் என்மீது எப்படி ஆயுத சட்டத்தின் கீழ்
வழக்குத் தாக்கல் செய்ய முடியும்? நான் செய்த பயங்கரவாத
செயல் என்ன? பிரேதம் இல்லாமல்
எப்படி
மரண விசாரணை நடத்த முடியும்?
என்று மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ்
விஜித்த பெர்னாந்து கேள்வி எழுப்பினார்.
நீர்கொழும்பில் இடம்
பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு
கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
பாதுகாப்பு அமைச்சரான
ஜனாதிபதி என்னை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாத காலம் தடுப்புக்
காவலில் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். என்னை 24 மணித்தியலாங்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து
விசாரணை செய்திருக்க முடியும். அதுவும் போதாதென்றால் நீதவான் நீதிமன்ற உத்தரவின்
பேரில் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை
செய்திருக்க முடியும். அந்த விசாரணைகளின் மூலமாக நான் இந்த கொள்ளைச் சம்பவத்தில்
சம்பந்தப்பட்டுள்ளேனா என்பதை கண்டறிந்து மேலதிக நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.
ஆயினும், நீர்கொழும்பு கல்கத்தை சந்தியில் என்னை கைது செய்து
மூன்று மாத காலம் தடுப்புக் காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எமது
நாட்டில் கொலைக்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள், பாலியல் வன்முறைக்காரர்கள் மூன்று மாத காலத்தில்
பிணையில் வெளி வருகிறார்கள். ஆனால, நான் பத்து மாத
காலத்தின் பின்னரே மேல் நீதிமன்றத்தால்
பிணையில் விடுதலை செய்யப்பட்டேன் என்றார்.
No comments:
Post a Comment