மைத்திரிபால
சிறிசேன எதிரணிக்கு சென்றது அதிக ஆசை மற்றும் பொறுமையின்மையினாலாகும். அவர்
பிரதமர் பதவி தனக்கு விரைவில் கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார். அப்படி
நடக்காத போது எதிரணிக்கு சென்று ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா
தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்கசவுக்கு ஆதரவு திரட்டும்
தேர்தல் பிரசாரக்
கூட்டம் நேற்று (30) மாலை நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் இடம்பெற்ற
போதே அவர் மேற் சொன்னவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர்
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது>
மைத்திரிபால
சிறிசேன பொருளாதாரம் தொடர்பான அடிப்படை அறிவில்லாதவராவார். அவரிடம்
பொருளாதாரத்ததில் கூறப்படும் கேள்வி> நிரம்பல் தொடர்பாக வினவுங்கள். அதற்கு அவருக்கு
பதில் கூறத் தெரியாது. அவரிடமா? நாட்டை ஒப்படைப்பது? மைத்திரிபால
சிறிசேனவின் சகோதரர்கள் பன்னிரண்டு பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் பொலன்னறுவை
பிரதேசத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அங்குள்ள
விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகின்றனர்.
நல்லாட்சியைப்பற்றிப்
பேசி வரும் எதிரணியில் இருப்பவர்கள் யார?;.
ரணில் விக்கிரமசிங்க அன்று பட்டலந்த வதை
முகாமை நடத்தியவர். ரிசாத் பதியுதீன்
அஸ்வர் எம்பியின் பாராளுமன்ற பதவியை
தனது கட்சிக்கு பெற்றுக் கொண்டு
எதிரணிக்குத்தாவியவராவார்.
No comments:
Post a Comment