இளைஞர்கள் டைட்டானிக் படத்தைப்
பாத்திருப்பார்கள். ஒருபோதும் மூழ்காது என்று கருதப்பட்ட டைட்டானிக் கப்பல் தனது கன்னிப் பயணத்திலேயே மூழ்கியது. மகிந்த ராஜபக்சவின் மூன்றாவது ஜனாதிபதி தேர்தல் பயணமும் டைட்டானிக் கப்பல் போன்று மூழ்கப் போகிறது. மூழ்கிக்
கொண்டிருக்கும் அந்தக் கப்பலில் இருந்து புத்திசாலிகள் வெளியேறிக்
கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கப்பலில் இருந்து பாய்ந்து எங்கள் பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார்.
பொது
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று
வியாழக்கிழமை (1) நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்
கூட்டத்தில் கலந்து கொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்வாறு குறிப்பிட்டார்.
எதிர்கட்சித்
தலைவர் ரணில் விக்கரமசிங்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
எமது
கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளரும் மேல்
மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் விஜித பெர்னாந்துவுக்கு இந்த அரசாங்கம் பயந்து
சிறையில் அடைத்தது. அதற்கான பதிலை இந்த தேர்தலில் நீர்கொழும்பு மக்கள்
வழங்குவார்கள்.
ராதஜபக்ச
அரசாங்கத்தினால் மீனவர்களும் ஏழை எளிய மக்களுக்கும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எமது ஆட்சியின் கீழ் வெளிநாட்டு படகுகள் இலங்கை
கடல் எல்லையில் மீன் பிடிப்பது முற்றாகத்
தடை செய்யப்படும். நீர்கொழும்பில் மீனவத் துறைமுகம் அமைக்கப்படும். நாங்கள் குறுகிய காலத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவுள்ளோம்.; சிறிய அளவில் கடன் பெற்றுள்ளவர்கள் வங்கிகளில்
நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளது. அரசாங்க
ஊழியர்களுக்ககு முதற் கட்டமாக பெப்ரவரி மாதம் ஐயாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு
வழங்கப்படும். பத்து இலட்சம் சுய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.
மைத்திறிபால
சிறிசேனவுக்கு வாக்களிப்தே ஏழை மக்கள் வாழ்வதற்கான ஒரே வழியாகும் என்றார்.
No comments:
Post a Comment