நல்லாட்சி
புரிவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
அப்டியானால் இந்த தேர்தலில் வன்முறைகள் அதிகரித்திருப்பதேன்? 2005 ஆம் ஆண்டின் பின்னர் ஜனாதிபதி அரசர் ஒருவரைப்
போன்று செயற்படுகிறார். அடக்கு முறை ஆட்சி சகலதுறைகளுக்கும்
விஸ்த்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எந்தவொரு ஆட்சியிலும் மக்களின்
சொத்துக்கள் இதுபோன்று கொள்ளையடிக்கப்படவில்லை. மக்களின் குரல் நசுக்கப்பட்டு
வருகிறது. கற்றவர்களின் கருத்துக்களும்
புறக்கணிக்கப்படுகிறது. என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேன தெரிவித்தார்.
நேற்று
வியாழக்கிழமை (1) மாலை நீர்கொழும்பு லெய்தன் மைதானத்தில் இடம்பெற்ற
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து
கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்
மேற்சொன்வாறு குறிப்பிட்டார்.
பல
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில்
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
கூறியதாவது,
யுத்த
வெற்றியின் பெருமைக்கு உரித்தானவர்கள் பொது மக்களும் முப்படையினரும் அதற்கு தலைமை
தாங்கிய ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுமேயாவார்கள். பொது மக்கள் பொருளாதார
கஸ்டங்களைத் தாங்கிக் கொண்டிருந்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
நாட்டில்
ஒரு கோடி மக்கள் ஒழுங்காக சாப்பிட முடியாத
வறுமை நிலையில் தற்போது வாடிக்கொண்டிருக்;கிறார்கள். இது தொடர்பாக நாங்கள்
ஜனாதிபதியிடம் கூறியபோது தேர்தல்
காலத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினால் போதுமானது என்று குறிப்பிட்டார்.
எனது
49 வருடகால அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ தேர்தல்களை
பார்த்துவிட்டேன். மகிந்த ராஜபக்சவின் அரசு வீழ்ச்சியடைந்து விட்டதை தற்போது பார்க்கிறேன். இந்த தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்துள்ளதையும் எனக்கு அமோக ஆதரவு அளிப்பதையும் காண முடிகிறது. இந்த தேர்தலில் எனது வெற்றி
உறுதியாகிவிட்டது
உலகத்தில்
ஊழல் அதிகமான அரசாங்கம் இந்த அரசாங்கம்தான். ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதா?
அல்லது நாட்டைக் காப்பாற்றுவதா? என்பதை மக்கள் நன்கு சிந்தித்து முடிவெடுத்து வாக்களிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment