நீர்கொழும்பில்
அமைந்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவரது வீடுகளுக்கு முன்பாக நாய்களின்
தலைகள் வைக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரபல மனித உரிமை
செயற்பாட்டாளரும்; காணாமல் போனோர் குடும்ப ஒன்றிய அமைப்பு , 'ரைட் டு லைப்'
மனித உரிமைகள் அமைப்பு ஆகியவற்றின் தலைவர்
பிரிட்டோ பெர்னாந்துவின் நீர்கொழும்பு பெரிய முல்லையில் அமைந்துள்ள வீட்டின்
கேட்டிலும் (புயவந) 'ரைட்டு லைப்'
மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த பிரசங்க
பெர்னாந்துவின்
பிட்டிபனையில் அமைந்துள்ள
வீட்டின் முன்பாகவும் இறந்த
நாய்களின் தலைகள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட
நேரத்தில் நாய்களின் தலைகள் வைக்கப்பட்டுள்ளதாக
தெரிய வருகிறது.
இரவு பத்து முப்பது
மணி அளவில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்த போதே நாய்களின் தலைகள்
வைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.
அரசாங்கத்துடன்
தொடர்புடைய குழுவினரின் அச்சுறுத்தும் செயலே இதுவெனவும் பிரிட்டோ பெர்னாந்து ஊடகங்களுக்கு
தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக
நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment