நீர்கொழும்பு மாநகர
சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு உறுப்பினர் ரெமோனா லான்ஸா எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்துள்ளார்.
இவருடன் இணைந்து முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மார்க் சுஜித்தும் எதிரணியின் பொது
வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு
ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்;.
இன்று திங்கட்கிழமை
முற்பகல் சிறிகொத்தவுக்கு சென்ற இருவரும் ரணில் விக்ரம சிங்கவை சந்தித்து தமது
ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதன்போது நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக்
கட்சி அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறப்பினருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து உட்பட
ஆதரவாளர்கள் பலர் உடன் இருந்தனர்.
முன்னாள் மாநகர சபை
உறுப்பிர் மார்க் சுஜித், மாநகர சபை உறுப்பினர்
ரெமோனா லான்ஸா ஆகிய இருவரும்
தம்பதிகளாவர். ரெமோனா லான்ஸா மேல் மாகாண சபை அமைச்சர் நிமல் லான்ஸாவின் ஒன்றுவிட்ட
சகோதரியாவார்.
No comments:
Post a Comment