நீர்கொழும்பு
நகரில் அமைந்துள்ள நகை மற்றும் வெளிநாட்டு
நாணயமாற்று முகவர் நிலையமொன்றில் ஆயுத முனையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம்
தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண சபை
உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து ஒரு
கோடி ரூபா வங்கிப் பிணையிலும் பத்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் மூன்று
நபர்களின் (நெருங்கிய
உறவினர், அரசாங்க ஊழியர்,
நீர்கொழும்பு
பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர்) சரீரப்பிணையிலும நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால்
இன்று திங்கட்கிழமை (8) விடுதலை செய்ய
உத்தரவிடப்பட்டார்.
இதுதவிர
மாதத்தில் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு குற்றத்தடுப்புப் பொலிஸ்
பிரிவிற்குச் சென்று காலை 9 மணி முதல் 12 மணி வரையான காலப்பகுதியில் கையொப்பமிட
வேண்டும் எனவும் நீதிபதி என்.வ.p கருணாதிலக்கிவினால்
ரொயிஸ் விஜித்த பெர்னாந்து
உத்தரவிடப்பட்டார்.
கடந்த பெப்ரவரி
மாதம் 17 ஆம் திகதி நீர்கொழும்பு
பிரதான வீதியில் அமைந்துள்ள நகை மற்றும்
வெளிநாட்டுநாட்டு நாணயமாற்று முகவர் நிலையத்தில் ஆயுத முனையில் முகத்தை
முழுமையாக மறைக்கும் ஹெல்மட் அணிந்து வந்த துப்பாக்கிதாரிகள் குழுவினரால் ஒரு கோடி
ரூபாவுக்கு மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரொயிஸ் விஜித்த
பெர்னாந்து உட்பட மேலும் மூவர் கைது
செய்யப்பட்டனர்.
ரொயிஸ் விஜித்த பெர்னாந்து 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த
நிலையில,; ஐக்கிய தேசியக்
கட்சியின் சார்பில்; மேல் மாகாண சபை தேர்தலில்; கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 29 ஆயிரத்து 291 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா
மாவட்டத்தில் ஆறாவது இடத்தைப் பெற்று மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
இவர்
நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி; பிரதான
அமைப்பாளரும், நீர்கொழும்பு
மாநகர சபையின் முன்னாள் எதிர் கட்சித் தலைவருமாவார்.
No comments:
Post a Comment