நீர்கொழும்பு தனியார் பஸ் சாரதிகள் இன்று(9) காலை 7 மணிமுதல் பணி பகிஸகரிப்புப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிறமாவட்டங்களில் இருந்தும் பிற பிரதேசங்களில் இருந்தும் நீர்கொழும்புக்கு
வரும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் சட்டவிரோதமான முறையில் பயணிகளை
ஏற்றிச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தனியார் பஸ்களின்; வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இன்றைய தினம் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக
வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார்
பஸ்களும் ஏனைய தனியார்; பஸ்களும் சேவையில் ஈடுபடவில்லை. இதன்
காரணுமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இது தொடர்பாக நீர்கொழும்பு தனியார் பஸ் சாரதிகள் தெரிவிக்கையில்,
நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்திற்கு பொலன்னறுவை, கடுவெல, தெரணியகல, உடுகம, மாவனெல்ல, தெல்தெனிய உட்பட பல பிரதேசங்களில் இருந்தும் வருகின்ற இலங்கை
போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச்
செல்கின்றன. இவ்வாறு வருகின்ற பஸ்கள் இடை நடுவில் வைத்து பயணிகளை ஏற்றிச்
செல்கின்றன. அந்த பஸ்களில் ஜனாதிபதியின் படங்கள் அல்லது போக்குவரத்து அமைச்சரின்
படங்கள் காணப்படுகின்றன. எமது பிரதான பஸ் நிலையத்தின் நேர அட்டவணைக்கு மாற்றமாக
சேவையில் ஈடுபடுகின்ற இந்த பஸ்கள் தொடர்பாக மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவிடம்
முறையிட்ட போதும், அமைச்சரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்குக் காரணம்
அமைச்சரை விஞ்சிய மறைகர சக்தி ஒன்று
செயல்படுவதனாலாகும். சட்விரோதமாக சேவயில் ஈடுபடும்; இந்த பஸ்கள் காரணமாக தனியார் பஸ்கள் மட்டுமன்றி நீர்கொழும்பு அரசாங்க
டிப்போவைச் சேர்ந்த பஸ்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதேவேளை, பயணுp ஒருவர் பஸ் சாரதி ஒருவரை
தாக்கியதன் காரணமாக பிரதான பஸ் நிலையத்தில் பெரும் அமளிதுமளி இடம்பெற்றது.
நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் பிரயணத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, பிரதி அமைச்சர் சரத்குமார
குணரட்ன காலை 8 மணியளவில் பிரதான பஸ்
நிலையத்திற்கு வந்து நீர்கொழும்பு தனியார் பஸ்கள்சாரதிகள்
மற்றும்முக்கியஸ்தர்களுடனும் நீரகொழும்பு அரச பஸ் டிப்போவின் முகாமையாளர்
அபேகோனுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
No comments:
Post a Comment