நீர்கொழும்பு மற்றும் ராகமை பிரதேசங்களில்
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு
நான்கரை கோடி ரூபா பெறுமதியான
நான்கு கிலோகிராம் 17 கிராம் நிறை கொண்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்ப, ஜயரத்ன வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் வைத்து பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது.
ஒருவர் தந்தை மற்றைய ஒருவர் மகனாவர். கைது செய்யப்பட்டுள்ள பிரதான
சந்தேக நபர்
பிரபல வர்த்தகராவார்..
முதலில் ராகமை பிரதேசத்தில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனை
தொடர்ந்து நீர்கொழும்பு, ஜயரத்ன வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து நான்கு கிலோகிராம் 17 கிராம் நிறை கொண்ட ஹெரோயின் போதைப்
பொருளுடன் மற்றைய நபர் பொலிஸ் போதைப்
பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மற்றும் ராகமை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின்போது இந்தச் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்
பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்
றூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் ராகமை மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில்
வசிப்பவர்கள் என தெரிய வருகிறது.
No comments:
Post a Comment