கிழக்கு மாகாணத்தின் ,
இறக்கண்டி,
கும்புருபிட்டிய
பிரதேசத்தில் வைத்து அண்மையில் (4-3-2015) சிலாபத்தைச் சேர்ந்த மீனவ படகுகள் இரண்டின் மீது தாக்குதல் நடத்தி ஐந்து
இலட்சம் ரூபாவுக்கு மேல் சேதம் ஏற்படுத்திய
விடயம் தொடர்பாக நீர்கொழும்பு ஐக்கிய மீனவ ஒன்றியத்தின் அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கும்புருபிட்டிய பிரதேசத்தில் சிலாபம் கருக்கபனே பிரதேசத்தைச் சேர்ந்த
மீனவர் ஒருவரின் படகு தீ
வைக்கப்பட்டமை மற்றைய படகு அடித்து
சேதத்திற்குள்ளாக்கப்பட்டமை தொடர்பாகவே ஐக்கிய மீனவ கூட்டமைப்பு அறிக்கையொன்றின் மூலமாக வேண்டுகோள் ஒன்றை விடுத்தள்ளது. மீனவர்
சமுதாயம் ஒற்றுமையை பேண வேண்டும் எனவும், தமக்குள் பிளவுபட்டு தேசிய ரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்
வகையில் செயற்படக் கூடாது எனவும் அந்த
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு ஐக்கிய மீனவ ஒன்றியத்தின் செயலாளர் மெக்ஸி கூங்ஞ, இணைப்பாளர் டப்ளியூ.யூட் நாமல் பெர்னாந்து
அகியோர் ஒப்பமிட்டு ஊடகங்களுக்கு
வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது மீனவ சமுதாயத்தின் ஒரு பிரிவினர் சகோதர மீனவ
சமுதாயத்தின் ஒருபிரிவினரை கிழக்கு மாகாணத்தில் மீன் பிடிக்கக் கூடாது என்று
பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அங்கிருந்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கை
மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக
சிலாபத்தைச் சேர்ந்த மீனவ படகுகள் இரண்டினை நாசமாக்கியுள்ளனர். இதன் காரணமாக ஐந்து இலட்சம்
ரூபாவுக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது.
சண்டைகள் ஏற்படாமல், அழிவுகளை ஏற்படுத்தாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு அமைத்திப் பாதையில் பயணிக்கும் இந்த
வேளையில், மதத் தலைவர்கள் மனித நேயத்துடன் செயற்பட்டு இந்த
பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment