Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, May 31, 2015

இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் ‘கிலாபத்' தின நிகழ்வு

 இந்த ஆண்டு நூற்றாண்டு விழா காணும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் கிலாபத்;; தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (31-5-2015) நீர்கொழும்பு அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் நடைப்பெற்றது.
இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் நீர்கொழும்பு ஜமாஅத் தலைவர் ஐ. ஏ. அஸ்லம் அஹ்மத் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் மௌலவி  எம்.ஏ. அஸ்மத் அஹ்மத், மௌலவி  ஜாவித் அஹ்மத் ஆகியோர் விசேட உரை நிகழ்த்தினர். நிகழ்வில் கிலாபத் உறுதி மொழி, கிராஅத், உர்து நஸம் (கீதம்) என்பனவும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர்.














No comments:

Post a Comment