Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, June 4, 2015

'போதைப் பொருளுடன் அறுவர் கைது' சிங்கள பத்திரிகைச் செய்தி விவகாரம்: மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்னாந்து சவால்

'போதைப் பொருளுடன் மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ்  பெர்னாந்துவின் சாரதி உட்பட அறுவர் கைதுஎன்று சிங்கள பத்திரிகைகள் இரண்டில் இன்று வியாழக்கிழமை (4) வெளியாகியுள்ள செய்தி  தொடர்பாக மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ்  பெர்னாந்து இன்று ஊடகங்கள் முன்னால் சவால் விடுத்தார்.

இன்று முற்பகல் அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, திவயின மற்றும் மவ்பிம  ஆகிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளின்படி போதைப் பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவர் தனது சாரதி என
நிரூபிக்கப்பட்டால் தான் வகிக்கும் சகல பதவிகளில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகிக்கொள்வதாக  அவர் சூளுரைத்தார்.  மேல் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் தனக்கு வழங்கப்படு;ம் வேதனத்தில் இருந்தே  தன்னுடன் இப்போதும் பணியாற்றும் சாரதிக்கு சம்பளம் வழங்குவதாகவும் அவர்  தெரிவித்தார்.

குறித்த பத்திரிகைச் செய்தி தவறானதாகும். இதற்கு முன்னர் நீர்கொழும்பில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பாகவும் தனது சாரதியாக பணியாற்றிய ஒருவரே இதனை மேற்கொண்டதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது எனவும், இது தனது அரசியல் வாழ்க்கைக்கு சேறு பூசும் திட்டமிட்ட குழு ஒன்றின் செயலாகும் எனவும். அவர் மேலும் தெரிவித்தார்.




இந்த செய்தியாளர் மாநாட்டில்  நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment