Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, June 17, 2015

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி ஆர்ப்பாட்டமும் பேரணியும்

 
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையை  மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி ஆர்ப்பாட்டமும் பேரணியும்

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையை   உடனடியாக மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி  இன்று புதன்கிழமை முற்பகல் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது.
 வைத்தியசாலையில் கட்டப்பட்டுள்ள ஏழு மாடிக் கட்டடம் உடைந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதை அடுத்து மேல் மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

சர்வ மதத்; தலைவர்கள், நீர்கொழும்பு  மாவட்ட வைத்தியசாலையை பாதுகாக்கும் அமைப்பு, நீர்கொழும்பு வைத்தியசாலை அபிவிருத்தி அமைப்பு, நகரைச் சேர்ந்த பல்வேறு சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

முற்பகல் 11 மணியளவில் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.  இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்பு கோசங்களையும் எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பேரணியாக சென்றனர்.   நீர்கொழும்பு மாநகர  சபை முன்பாக  சென்ற பேரணி  மீண்டும் வைத்தியசாலை முன்பாக நன்பகல் 12.15 மணியளவில் வந்தடைந்தது.

 இந்த ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் பிரதி அமைச்சர் சுதர்சனி பெர்னாந்து புள்ளே, மேல் மாகாண சபை அமைச்சர்  நிமல் லான்ஸா,மேல் மாகாண சபை உறுப்பினர்களான ரொயிஸ் பெர்னாந்து, சாபி ரஹீம், நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் , சர்வ மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.














 இந்த ஆர்ப்பாட்டம்  மற்றும் பேரணி காரணமாக நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. நீர்கொழும்பு போக்குவரத்துப் பொலிஸார்  வாகனப் போக்;குவரத்தை சீர்செய்தனர்.

No comments:

Post a Comment