நீர்கொழும்பு, பெரியமுல்லை 159 ஏ ஹுனுப்பிட்டிய பிரிவு சமூர்தி
பயனாளிகளின் பங்களிப்பில் முதலாம் வருட இப்தார் நிகழ்வு அண்மையில் (8) றஷாட் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமூர்தி
பயனாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின்
கிராத், கஸீதா, இஸ்லாமிய கீதம் போன்ற நிகழ்ச்சிகள்
இடம் பெற்றதுடன் பரீசில்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அல்ஹாஐ; பரீஸ் , நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஐ; அன்வர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக சமூர்தி வங்கி முகாமையாளர் திலினி, கிராம சேவகர்களான ஜனாப் ஜினூஸ், ஐயகொடி மற்றும் சமூர்தி பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்







No comments:
Post a Comment