திவுலபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவரின் டிப்பன்டர்
வாகனத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு
நேர் மோதி இருவர் பலியாகியுள்ளதாக கட்டானை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) நள்ளிரவு 1 மணியளவில் கதிரானை
சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அல்சேன, பொத்தலகம, மீர்pகம பிரதேசத்தைச் சேர்ந்த தேவபக்சகே நிஹால் விஜித்த (55 வயது) , கலவான, மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் விஜயதுங்க கமராலலாகே லஹிரு சத்துரங்க (24 வயது) ஆகியோரே மரணமடைந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
விபத்தில்
மரணமடைந்த இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கதிரானையிலிருந்து ருக்கத்தல்ல நோக்கி பயணித்துக்
கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில்
திவுலபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவரின் டிப்பன்டர் வண்டி
திவுலபிட்டியிலிருந்து நீர்கொழும்பு திசையை நோக்கி பயணித்துக் கொணடிருந்துள்ளது.
கதிரானை சந்தியில் வைத்து இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளனர்.
கட்டானை பொலிஸார்
டிபபன்டர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பாக
தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மரணமடைந்த இருவரின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment