நீர்கொழும்பு நகரில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று
சனிக்கிழமை நோன்புப் பெருநாள் தொழுகை
இடம்பெற்றது. பெரியமுல்லையில் அமைந்துள்ள 'மஸ்ஜித் பஸ்ல்' அஹ்மதியா முஸ்லிம்
பள்ளிவாசலில் பெண்கள்
தொழுவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இலங்கையில் தங்கியிருந்து
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் (UNRFC) ஊடாக வெளிநாடுகளில் தஞ்சம்
கோரியுள்ள பாகிஸ்தானியர்கள் இந்த பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் பெருமளவில்
கலந்து கொண்டனர்.
மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் மௌலவி அஸ்மத் அஹ்மத் பெருநாள்
குத்பா நிகழ்த்துவதையும் பெருநாள் தொழுகை
இடம்பெறுவதையும், ஒருவருக்கொருவர் ஸலாம் கூறி
மகிழ்ச்சி தெரிவிப்பதையும் படங்களில் காணலாம்.

No comments:
Post a Comment