துப்பாக்கியினால் நபர் ஒருவரை
சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகளின் போது குற்றவாளியாக காணப்பட்ட
எதிரிக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.வி. கருணாதிலக்க நேற்று திங்கட்கிழமை
(20) மரண தண்டனை வழக்க தீர்ப்பளித்தார்.
வேஹரகந்த பெத்தகொன பிரதேசத்தைச் சேர்ந்த நிஸ்ஸங்க ஆராச்சிலாகே
ரங்கநாத் கருணாரத்ன (50 வயது) என்பவரே மரண தண்டனை வழக்க
தீர்ப்பளிக்கப்பட்டவராவார்.
கந்தானை மஹபாக பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான
நிக்சேன் த சொய்ஸா (40 வயது) என்பவரை 10-4-1990 அன்று பிஸ்டலினால் சுட்டுக்
கொலை செய்ததாக பிரதிவாதி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த விசாரணையின் போது
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு பிரதிவாதிக்கு மரண தண்டனை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலையுடன்
மேலும் மூன்று சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ளதுடன்
அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார் மற்றைய இரு சந்தேக நபர்களையும் கைது செய்ய திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment