Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, July 25, 2015

சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு: பத்து இலட்சம் ரூபா பெறுமதியான மதுபானங்களுடன் சந்தேக நபர் கைது

தடுகம்ஓய, கிம்புல்பொக்க தீவுப் பகுதியில்  வண்டல் தாவரங்களைக் கொண்ட காட்டுப் பகுதியில்  இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைத்த நீர்கொழும்பு கலால் பிரிவு அதிகாரிகள் பத்து இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியான மதுபானங்களை கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கலால் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து கலால் பிரிவு  அதிகாரிகளைக் கொண்ட குழவினர் கடந்த வெள்ளிக்கிழமை (24) படகொன்றில் சென்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 737 சட்டவிரோத மதுபான போத்தல்கள், மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை அதிகாரகள் கைப்பற்றியுள்ளனர்.
கைதும செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது மேலதிக நீதவான் திலக்கரத்ன பண்டார சந்தேக நபருக்கு ஒரு  இலட்சத்து 65 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.







No comments:

Post a Comment