Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, July 25, 2015

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டட புனரமைப்பு வேலைகளுக்கான நிதி முடக்கம்

உடைந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டடத்தின் புனரமைப்பு வேலைகளுக்காக  மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட 300 மில்லியன் ரூபா நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படாததன் காரணமாக  அதன் புனரமைப்பு வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வைத்தியசாலையை பாதுகாக்கும் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் தெரிவித்ததாவது,



கடந்த ஜுன் மாதம்  நீர்கொழும்பு  மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, வைத்தியசாலையை பார்வையிட்ட பின்னர் நடைப்பெற்ற கூட்டத்தில் வைத்து, வைத்தியசாலையின் ஏழு மாடிக் கட்டடத்தை புணரமைப்பு செய்ய 300 மில்லியன் ரூபாவும், இரும்பினால் நிர்மாணி;க்கப்படும் வார்டுகளை கொண்ட  நான்கு கட்டடங்களை புதிததாக அமைப்பதற்காக 200 மில்லியன் ரூபாவும் தமது  அமைச்சினால் உடனடியாக ஒதுக்கப்படவுள்ளதாக   தெரிவித்தார்.  தற்போது 200 மில்லியன் ரூபா செலவில் புதிய வார்;டுகளுக்கான நிர்மாணிப்பு  வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆயினும், ஏழு மாடிக் கட்டடத்தின் புணரமைப்பு  வேலைகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ளன. இதன் காரணமாக நோயாளிகளும் , வைத்தியர்களும், வைத்தியசாலை ஊழியர்களும் பல்வேறு அசௌகாரியங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்தக் கட்டடத்தின் புணரமைப்பு வேலைகளுக்கான நிதி உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும்.  அத்துடன், தகுதி வாய்ந்த பேராசிரியர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் அல்லது பொறுப்பின் கீழ் அந்த புனரமைப்பு வேலைகள் நடைபெற வேண்டும். அதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட வேணடும் என்று தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை (23-7-2015) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்து  வைத்தியசாலையின் புணரமைப்பு வேலைகளையும், புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடங்களையும் மேற்பார்வையிட இருந்த நிகழ்வு    திடீரென்று ரத்துச் செய்யப்பட்டதாக அறிய முடிந்தது.


படங்கள்:  200 மில்லியன் ரூபா செலவில் இரும்பினால் நிர்மாணி;க்கப்படும் வார்டுகளை கொண்ட  கட்டடங்கள்


No comments:

Post a Comment