கம்பஹா
மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதுவரையில் பல்வேறு தேர்தல்களுக்கு முகம் கொடுத்துள்ள எமது சமூகம், தமது வாக்குரிமையை சரியாகப் பயன்படுத்த தவறியதன் விளைவை நாங்கள்
இந்த மாவட்டத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சுயநலமிக்க அரசியல்வாதிகளின்
பிழையான வழிகாட்டலகளினால் எமக்காக சேவை செய்யக்கூடிய சிறந்த அரசியலவாதிகளை தெரிவு
செய்ய முடியாமல் போனமை எமது சமூகத்தின் துர்ப்பாக்கியமாகும் என்று கம்ஹா
மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்
பொதுத் தேர்தலில் போட்டியிடும் எஸ். சசிகுமார் தெரிவித்தார்.
நீர்கொழும்பு
பெரியமுல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்ற பிரசாரக்
கூட்டத்தில் கலந்து கொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
இந்த பிரசாரக் கூட்டம் கம்ஹா மாவட்டத்தில்
போட்டியிடும் தமிழ் வேட்பாளரான எஸ் சசிகுமார் மற்றும் ஷாபி ரஹீம் ஆகியோருக்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் வேட்பாளர் சாபி ரஹீம், கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி நியாஸ் முஹம்மத் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் வேட்பாளர் சாபி ரஹீம், கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி நியாஸ் முஹம்மத் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றினர்.
வேட்பாளர் எஸ். சசிகுமார் அங்கு தொடர்ந்து
உரையாற்றுகையில் கூறியதாவது,
தேர்தல்களின்
போது எமது வாக்குகள் வீணடிக்கப்படுகின்றன. சிறுபான்மை மக்களுக்கு மிகக் குறைந்த
அளவு சேவை செய்யக்கூடிய பெரும்பான்மை இனத் தலைவர்களையே இதுவரை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். எமது
மக்களுக்கு நாங்கள் தெரிவு செய்து
அனுப்பும் தலைவர்களால் குறைந்த சேவை கிடைப்பதற்குக் காரணம் தமிழ் பேசும்
உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாமை அல்லது இல்லாமையே ஆகும். கடந்த மேல் மாகாண சபை
தேர்தலிலும் இதுவே நடந்தது. தமிழ்ர் ஒருவர் கம்பஹா மாவட்டத்தில் தெரிவாகவில்லை.
தமிழ் மக்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த மாவட்டத்தில்
வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு எங்கள்
இருவரையும் (ஷாபி ரஹீம், சசிகுமார்)
தெரிவு செய்ய வேண்டும்.
கடந்த
மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஏணிச் சின்னத்தில் நான் போட்டியிட்டேன்.
அன்று சற்று பயங்கரமான சூழ்நிலை இருந்தது. அப்போது நீர்கொழும்பு மக்கள் என்னை
சரியாக அறிந்திருக்கவில்லை. ஆயினும் 2500 இற்கு மேற்பட்ட வாக்குகள்
எனக்கு நீர்கொழும்பில் கிடைத்தன. நீர்கொழும்பில் எமது காரியாலயத்தை திறப்பதற்கு
முயற்சி செய்த போதிலும் அதற்கு தடை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு இலவச
கண்ணாடிகள் வழங்க முயற்சித்த போதும், ஒன்று
கூடல் ஒன்றுக்காக முயற்சித் போதும் அது முடியாமல் போனது. ஆயினும, வத்தளை பிரதேசத்தில் எமக்கு எந்தவிதமான
தடைகளும் கிடையாது. இப்போது
நீர்கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்கள் என்னை நன்கு அறிந்து வைத்துள்ளனர்
என்றார்.
கம்பஹா மாவட்ட வேட்பாளர் ஷாபி
ரஹீம் உரையாற்றும்போது
இதுவரை
காலமும் இடம்பெற்ற தேர்தல்களில் கம்பஹா மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம்
வாக்குகள் பெரும்பான்மையின வேட்பாளர்களால் கொள்ளையிடப்பட்டன. மாகாண சபைக்கு அல்லது பாராளுமன்றத்திற்கு
கம்பஹா மாவட்டத்தில் தமிழ் , முஸ்லிம்கள் தெரிவு
செய்யப்படாமைக்கு தமிழ் பேசும் மக்கள்தான் காரணம். எமது மக்கள் தேர்தல்களின் போது பெரும்பான்மையின பிரதிநிதிகளுக்கு
அதிகம் வாக்களிக்கின்றனர். பின்னர் ஏமாந்து போகின்றனர். எமது வாக்குகள்
கொள்ளையிடப்படுவதை நாங்;கள் உணர்வதில்லை என்று மேல்
மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் கம்ஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்
கட்சியின் சார்பில் பொதுத் தேர்தலில்
போட்டியிடுபவருமான ஷாபி ரஹீம் தெரிவித்தார்.
நீர்கொழும்பு
பெரியமுல்லையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்ற
பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு கூறினார்.
மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அங்கு
தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
நான்
இதுவரை மூன்று தடைவைகள் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.
ஆயினும் தமிழ் வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படாமை துரதிஸ்டவசமாகும். நூன் மாகாண
சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல்வேறு உதவிகளை தமிழ் பாடசாலைகளுக்கு
செய்துள்ளேன். உதாரணமாக நீர்கொழும்பு
விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரிக்கு
முச்சக்கர வண்டி ஒன்றை அன்பளிப்பு செய்ததை குறிப்பிடலாம.; கம்பஹா
மாவட்டத்தில் 80 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களும், 70
ஆயிரம் தமிழ் வாக்காளர்கள உள்ளனர். இரு இனங்களும் இணைந்து வாக்களித்தால் இரண்டு
தமிழ் பேசும் வேட்பாளர்களை பாராளுமன்றம் அனுப்ப முடியும். எமது மாவட்டத்தைச்
சேர்ந்த சிறுபான்மை இனத்தவர்களான நாங்கள்
இருவரும் வெற்றிபெற வேண்டுமென்றால் தமிழ் பேசும் பேசும் மக்கள் எங்களுக்கு
வாக்களிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment