முச்சக்கர
வண்டி மீது எதிர்பக்கமாக வேகமாக வந்த வேன் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி
படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு
மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம்
இன்று வியாழக்கிழமை இரவு (10) 7.45 மணியளவில் நீர்கொழும்பு தளுபத்தை> பல்லன் சேனை வீதியில்
இடம்பெற்றது.
இந்த
விபத்துச் சம்பவத்தில் தளுபத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சுஜீ என்ற குடும்பஸ்த்தரே
படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.இவர் மோட்டார்
சைக்கிள் திருத்துனராக தொழில் புரிபவராவார்.
இச்சம்பவம்
தொடர்பாக மேலும் தெரியவருவதாவது>
காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி தளுபத்தை> பல்லன் சேனை வீதியில்
முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது> அந்த வீதிக்கு வரும்
குறுக்கு வீதி ஒன்றிலிருந்து வேன் வேகமாக
வந்து முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
சம்பவத்தை
அடுத்து; படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி
பிரதேசவாசிகளால் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவத்தில்
முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன் வேனின் முன்பக்கத்திற்கு சேதம்
ஏற்பட்டுள்ளது.
சம்பவம்
தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment