நீர்கொழும்பு
வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில்
சர்வதேச சமாதான தினம் இன்று புதன்கிழமை (22) கொண்டாடப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.இஸட்.ஷாஜஹான் தலைமையில் பாடசாலை
மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரிய
ஆலோசகர் ரிஸிஹரன், ஆசிரியை பர்லின் ஆகியோர் சமாதானத்தின் முக்கியத்துவம்
தொடர்பாக உரையாற்றினர் . பாடசாலை அதிபர் எம்.இஸட்.ஷாஜஹான் சமாதானம் என்ற தலைப்பில்
கவிதை வாசித்தார். சாதாரண தரம் பயிலும்
மாணவி ஒருவர் ‘’நான் கருதும் சாமாதானம்’
என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆசிரியை தர்சினி சமாதானப் பாடல் இசைத்தார்.
ஆசிரியை தர்சினி
அதிபர் எம்.இஸட்.ஷாஜஹான்
ஆசிரிய ஆலோசகர் ரிஸிஹரன்
No comments:
Post a Comment