நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்ய
முயற்சி செய்து ஆபத்தான நிலையில்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(27) இடம்பெற்றுள்ளது.
மன்னப்பெரும முதியான்சலாகே சுசில் பண்ட்h (33 வயது) என்ற இரண்டு
பிள்ளைகளின் தந்தையே தற்கொலை செய்ய முயற்சி செய்த கைதியாவார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தற்கொலை செய்ய முயற்சி செய்த நபர் கொலை குற்றச்சாட்டொன்றின்
பேரில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளவராவார். இவர் முல்லேகம, நவத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் இடம்பெற்ற போயா தினமான
ஞாயிற்றுக்கிழமை அன்று சிறைச்சாலையில் பௌத்த சில் அனுஸ்டானம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கைதியும் அந்த மத நிகழ்வில் பங்குபற்றியுள்ளார்.
பின்னர் சிறைச்சாலையின் குளியலறைக்குச் சென்று சில்
அனுஸ்டிக்க பயன்படுத்தப்பட்ட வெள்ளைத் துணியைப் பயன்படுத்தி குளியலறையின் யன்னலில்
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
சம்பவத்தை அடுத்து வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்
பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகிறார். தனது
இரண்டு பிள்ளைகளையும் நினைத்து கவலை அடைந்த நிலையிலேயே அவர் தற்கொலைக்கு முயற்சி
செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment