கம்பஹா, கொட்டதெனியாவ
அகரங்கஹ பகுதியில் 5வயது சிறுமியான சேயா சந்தவமி வன்புணர்வுக்கு
உட்படுத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான
கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ்
பியசாந்த (வயது 32), மருத்துவ பரிசோதனைக்காக நீர்கொழும்பு
வைத்தியசாலைக்கு இன்று அழைத்துவரப்பட்டார்.
சந்தேக
நபரை சட்டவைத்திய நிபுணர் வைத்தியர் எம்.என். ரா{ஹல் ஹக் வைத்திய
பரிசோதனையை செய்தார்.
இரகசிய
பொலிஸார் சந்தேகநபரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நீர்கொழும்பு
வைத்தியசாலைக்கு கொண்டுவந்தபோது அங்கு பெரும் எண்ணிக்கையானோர் குழுமியிருந்தனர்.
சந்தேகநபரை இரகசிய பொலிஸார் வைத்திய
பரிசோதனையின் பின்னர் வாகனத்தில் அழைத்துச் சென்ற போது அங்கு நின்ற சிலர் கோசம்
எழுப்பியவாறு வாகனத்தை தாக்கினர்.





No comments:
Post a Comment