பாடசாலை கல்வியை முடித்த பின்னர் மேலதிக
வகுப்பொன்றுக்கு சென்று கொண்டிருந்த 19 வயது யுவதியை
ஏமாற்றி விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்த சந்தேக
நபர்களான சகோதரர்கள் இருவரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் திலகரத்ன
பண்டார எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட யுவதி நீர்கொழும்பு, குடாபாடு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கடந்த 16 ஆம் திகதி அந்த யுவதி மேலதிக வகுப்பொன்றுக்கு
சென்று கொண்டிருக்கும் போது நீர்கொழும்பு
கொப்பரா சந்தியில் வைத்து காரில் வந்த
சந்தேக
நபர்கள் யுவதியை சந்தித்துள்ளனர். பினட்னரட அவர்கள் யுவதியின்
தொலைபேசி இலக்கத்தைக் கேட்டுப் பெற்றுள்ளனர்.
சந்தேக
நபர்கள் இருவரும் கடந்த 19 ஆம் திகதி (19-10-2015)
நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்தில் வைத்து
யுவதியை சந்தித்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். காரில் பயணிக்கும் போது விலை
உயர்ந்த மதுபான போத்தல் ஒன்றையும்,
குளிர்பான போத்தல் ஒன்றையும் மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் கொள்வனவு
செய்துள்ளனர்.
ஏத்துக்கால
பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றுக்கு யுவதியை
அழைத்துச் சென்ற சந்தேக நபர்கள் யுவதியின் விருப்பத்திற்கு மாற்றமாக பாலியல்வல்லுறவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட
யுவதி பொலிஸ் நிலையத்தில் செய்த
முறைப்பாட்டை அடுத்து,பொலிஸார்
யுவதியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர். நீர்கொழும்பு
மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி விசேட வைத்திய நிபுணர் நூருல் ஹக்
வெளயிட்டுள்ள மருத்துவ அறி;ககையில் யுவதி
வல்லுறவு செய்யப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்
சந்தேக நபர்களை நீதவான் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை ஆஜர் செய்தபோதே இருவரையும் 4 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டார்.
பிரதிவாதியின்
சார்பில் சட்டத்தரணி நெல்சன் பி குமாரநாயக்க
மன்றில் ஆஜரானார்.
No comments:
Post a Comment