Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, October 23, 2015

விமான நிலையத்தில் கைது செயயப்பட்ட விமல் வீரவங்சவுக்கு பிணை

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் சட்டவிரோத கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் ஆஜர் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை நீர்கொழும்பு  மேலதிக நீதவான் திலகரத்ன பண்டார  பத்து இலட்சம் ரூபா கொண்ட இரண்டு நபர்களின் சரீரப் பிணையிலும் பத்தாயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.


இன்று முற்பகல் வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் விமான நிலையத்தில் கைது செயயப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மாலை நான்கு மணியளவில் நீர்கொழும்பு  நீதவான் நீதிமனற்த்திற்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரப்பட்டார் இவர் சார்பில் சட்டத்தரணிகளான பாலித்த கமகே, கபில கமகே, ரகித்த அபேகுணவர்தன,  பிரேமநாத் தொலவத்த ஆகியோர் மன்றில் ஆஜரானார்கள்.


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, விமல் வீரவங்சவின் மனைவி உட்பட  முக்கியஸ்தர்கள் சிலரும் நீதிமன்றிற்கு வருகைத் தந்திருந்தனர்.

இந்நிலையில், நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட விமல் வீரவங்சவை பிணையில் விடுதலை செய்ய நீதவாதன் உத்தரவிட்டார். இந்த வழக்கு  28-10-2015 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment