இதுதொடர்பாக
ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை (17) மாலை நீர்கொழும்பு
பெரடைஸ் பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.
நீர்கொழும்பு ரோட்டரி கழகத்தின் சர்வதேச
பணிப்பாளர் வைத்தியர் கே. சுறி ரஞ்சன், நீர்கொழும்பு
ரொட்டரி கழகத்தின் தலைவர் அஜித்வீரசிங்க, செயலாளர் பிரடி குரூஸ், செயற்றிட்ட
முகாமையாளர் சுதந்த லியனகே ஆகியோர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர்.
வைத்தியர்
கே. சுறி ரஞ்சன் இது தொடர்பாக விளக்கமளிக்கையில்,
எதிர்வரும்
சனிக்கிழமை (24-10-2015) இடம்பெறவுள்ள வாகனப்
பேரணியில் 100 வாகனங்கள் பங்குபற்றவுள்ளன. அன்றைய தினம் காலை 8 மணிக்கு
நீர்கொழும்பு மாநகர சபை மைதானம்
அருகிலிருந்து வாகனப் பேரணி ஆரம்பமாகவுள்ளது. இந்த வாகனப் பேரணி நீர்கொழும்பு, பமுனுகம், வத்தளை, ஜா-எல, கந்தானை, திவுலப்பிட்டி, கட்டானை, மினுவாங்கொடை, கொச்சிக்டை ஊடாகப் பயணித்து மீண்டும் ஆரம்ப இடத்தை
வந்தடையவுள்ளது. இதுதவிர சர்வதேச போலியோ நிதியத்திற்கு நிதி திரட்டும் வகையில்
எதிர்வரும் 26 ஆம் திகதி
நீர்கொழும்பு ஜெட்வின்ங் புளு ஹோட்டலில்
இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படவுள்ளது.
பாகிஸ்;தான், ஆப்கானிஸ்தான்
தவிர்ந்த ஏனைய நாடுகளில் போலியோ நோய்
ஒழிக்கப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதியாக போலியோ நோயாளி
ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டார். யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வடக்குப் பகுதியில்
போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக உறுதியான தகவல் கிடைக்கவில்லை. தற்போது
எமது நாட்டில் போலியோ நோயினால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவிக்கமுடியும், ஆயினும், எதிர்காலத்தில் எவரும் பாதிக்கப்படக் கூடாது
என்பதற்காக மக்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் ஐந்து
வயதுக்கு குறைவான சிறுவர்களையே தாக்குகிறது, ஒருவர்
பாதிக்கப்பட்ட பின்னர் போலியோ பாதிப்பிலிருந்து மீள முடியாது. எனவே, போலியோவுக்கான தடுப்பு மருந்தை சிறுவர்களுக்கு
வழங்க வேண்டியது கட்டாயமாகும்.
No comments:
Post a Comment