மதுபோதையில்
விமானத்தின் தொலைக்காட்சிப் பெட்டியை தாக்கி உடைத்த பயணியை நாளை செவ்வாய்க்கிழமை
வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.
குணதாச உத்தரவிட்டார்.
காலி. கோட்டைவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த பரணவித்தான அசேல விஜேநாயக்க (29 வயது) என்பவரே
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.
சந்தேக
நபரான பயணி டுபாயில் தொழில்
செய்பவராவார். இவர் யு.எல். 226 இலக்க விமானத்தில் 18 ஆம் திகதி அதிகாலை
இலங்கை வந்தடைந்துள்ளார். விமானத்தில் பயணிக்கையில் நன்றாக மது அருந்தியுள்ளதோடு
அநாகரிகமாக மது போதையில்
நடந்து கொண்டுள்ளார். இந்நிலையில் விமானத்தில் இருந்த
தொலைக்காட்சிப் பெட்டியை தாக்கி உடைத்துள்ளார்.
இந்நிலையில்
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது பொலிஸார் சந்தேக நபரை கைது
செய்துள்ளனர். பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோதே சந்தேக நபரை நாளைவரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment