Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, October 14, 2015

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் புதிய நவீன வார்டுகள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்  200 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட   நான்கு  நவீன வார்டுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த  திங்கட்கிழமை (12-10-2015) முற்பகல் திறந்து வைத்தார்.
வைத்தியசாலையில் உடைந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள ஏழு மாடிக்கட்டடம் புனரமைப்பு செய்யப்படுவதற்கு மாற்றீடாக இந்த நவீன வார்ட்டுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் நிதியுதவியுடன்  மொறட்டுவை பல்கலைகழகத்தின்  கட்டிட நிர்மாணப் பொறியியல் பீடம், தொழில் நுட்பப்பிரிவு ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் இந்த வார்ட்டுக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

சுகாதாரம்,போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித்த சேனாரத்ன,  பிரதி அமைச்சர்களான சுதர்ஸனி பெர்னாந்து புள்ளே, நிமல்லான்ஸா, மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து, நீர்கொழும்பு மேயர் அன்டனி ஜயவீர், மாநகர சபை உறுப்பினர்கள், சர்வ மதத் தலைவர்கள் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலர் இந்நிகழ்வில் பங்கு பற்றினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய வார்டுகளின் பெயரப்;படிகத்தை திரை நீக்கம் செய்து வைத்ததுடன், நாடாவை வெட்டி வார்ட்டுகளையும் திறந்து வைத்தார்.
புpன்னர் ஜனாதிபதி வைத்தியசாலையை சுற்றி பார்வையிட்டதுடன் சிறுவர் வார்ட்டுக்கு சென்று சிறுவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.














No comments:

Post a Comment