Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, October 14, 2015

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் என். புவனேஸ்வர ராஜாவுக்கு சிறந்த அதிபருக்கான ‘பிரதீபா பிரபா’ விருது

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் என். புவனேஸ்வரராஜா  ராஜாவுக்கு சிறந்த அதிபருக்கான பிரதீபா பிரபா விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஆசிரியர் தினத்தன்று (6-10-2015) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஆசிரியர், அதிபர்களுக்கான தேசிய  விருது  வழங்கல் விழாவில்  வைத்து இவருக்கான விருதினை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வழங்கினார்.

அதிபர் என். புவனேஸ்வரராஜா  ஆரம்ப கல்வியை கதிரேசன்  தமிழ் மகாவித்தியாலயம் மற்றும் சுலைமானியா மத்திய கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். பின்னர்  பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
கலைமாணி மற்றும் கலை முதுமாணிப் பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டமேற்கல்வி டிப்ளோமாவையும் நிறைவு செய்தார். இவர்  தெரணியாகல  கதிரேசன் தமிழ் மகா வித்தியாலயத்தில்  பிரதி அதிபராகவும்,  கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் வித்தியாலயத்தில்  பிரதி அதிபராகவும், அதிபராகவும் ,  மாபொலை அல்- அஸ்ரப் முஸ்லிம் வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment