இவ்வருடம்
இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்
நீர்கொழும்பு கல்வி வலய தமிழ் மொழிப் பாடசாலைகளில் 28 மாணவர்கள் பரீட்சையில்
சித்தி அடைந்துள்ளனர்.
விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் 21 மாணவர்களும்,
அல்பலாஹ் முஸ்லிம்
வித்தியாலயத்தில் நான்கு மாணவர்களும்,
அல்- ஹிலால் மத்தியக்
கல்லூரியில் மூன்று மாணவர்களும் சித்தியடைந்திருப்பதாக அந்தப் பாடசாலைகளின்
அதிபர்கள் தெரிவித்தனர்.
விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் சித்தியடைந்துள்ள
மூன்று மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளனர். அந்தப் பாடசாலையைச் சேர்ந்த என். நிருவதன் 187 புள்ளிகளைப் பெற்று
மாவட்டத்தில் முதலாமிடத்தையும், எப். ஆயிஸா 180 புள்ளிகளைப் பெற்று
மாவட்டத்தில் இரண்டாமிடத்தையும், ஆர்.சபீஸன் 179 புள்ளிகளைப் பெற்று
மாவட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமைத் தேடிந்தந்துள்ளனர்.
இதேவேளை, வெளியிடப்பட்டுள்ள தரம் ஐந்து பலமைப் பரிசில்
பரீட்சையில அல்- ஹிலால் மத்தியக் கல்லூரி மாணவி செல்வி ஜன்ஸீர் சஹ்தா 175 புள்ளிகள ;பெற்று பாடசாலைமட்டத்தில்
முதலிடம்பெற்றுள்ளார். இவர் இணைபாடவிதான
செயற்பாடுகளிலும் திறமை காட்டி வருபவராவார்.
நீர்கொழும்பு லாஸரஸ் வீதியைச் சேர்ந்த பாத்திமா சஹ்தா அல்-
ஹிலால் மத்தியகல்லூரியின் ஆசிரியர் ஏ.ஏஜன்ஸீர் எஸ்.எப்சிபானா தம்பதிகளின் புதல்வியாவார்.

No comments:
Post a Comment