இன்று சனிக்கிழமை (24-10-2015) அனுஸ்டிக்கப்படும் சர்வதேச போலியோ
தினத்தையிட்டு மக்களுக்கு விழிப்பூட்டும்
வகையில் நீர்கொழும்பு ரோட்டரி கழகம்
நீர்கொழும்பில் வாகனப் பேரணி நடத்தியது.
நீர்கொழும்பு
மாநகர சபை முன்றலில் இருந்து வாகனப் பேரணி ஆரம்பமானது. இலங்கை ரோட்டரி கழகத்தின் கவர்னர் யேசுதாசன் பேரணியை கொடி அசைத்து ஆரம்;பித்து வைத்தார். நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, மாநகர சபை உறுப்பினர் தயான் லான்ஸா, ரோட்டரி கழகத்தின் சர்வதேச பணிப்பாளர் வைத்தியர்
கே. சுறி ரஞ்சன், நீர்கொழும்பு ரொட்டரி
கழகத்தின்
தலைவர் அஜித்வீரசிங்க, செயலாளர் பிரடி
குரூஸ், செயற்றிட்ட
முகாமையாளர் சுதந்த லியனகே உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இன்று
காலை 8 மணிக்கு நீர்கொழும்பு மாநகர சபை மைதானம் அருகிலிருந்து வாகனப் பேரணி
ஆரம்பமாகனது. இந்த வாகனப் பேரணி நீர்கொழும்பு, பமுனுகம, வத்தளை, ஜா-எல, கந்தானை, திவுலப்பிட்டி,கட்டானை, மினுவாங்கொடை, கொச்சிக்டை ஊடாகப் பயணித்து மீண்டும் ஆரம்பித்த
இடத்தை வந்தடைந்தது.
No comments:
Post a Comment