பாடசாலையில் பதினொராம் தரத்தில் பயிலும் மாணவியான தனது மகளை ஆறு மாத கர்ப்பிணியாக்கிவிட்டு தந்தை
ஒருவர் தலைமறைவான சம்பவம் புத்தளம், மணல்குன்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
புத்தளம், மணல்குன்று
பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மத் ரிஸ்வி (45 வயது) என்பவரே தலைமறைவாகியுள்ள சந்தேக
நபராவார். இவர் கோப்பித்தூள் தயாரித்து பக்கற்றுக்களில் அடைத்து விற்பனை செய்யும்
சிறு வியாபாரத்தில் ஈடுபடுபவராவார்.
16 வயதான
பாதிக்கப்பட்ட சிறுமி இந்த வருடம்
சாதாரண தரப் பரீட்சை எழுத இருப்பவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து
பெற்றவர்களாவர். ஐந்து வயது தம்பி, 11 வயது தங்கை மற்றும் பாதிக்கப்பட்ட 16 வயது
சிறுமி ஆகியோர் தந்தையுடன் தனியாக வசித்து
வந்துள்ளனர்.
சந்தேக
நபரான தந்தை தனது மூத்த மகளான
சிறுமியை நீண்ட காலமாக பாலியல்
துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார் என தெரிய வருகிறது. இந்நிலையில், சிறுமி நோய் வாய்ப்பட்டுள்ளார். சிறுமியின்
பாட்டியும் தந்தையின் மூத்த சகோதரியும் சிறுமியை வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச்
சென்று பரிசோதனை செய்தபோது சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய
வந்துள்ளது.
இதனை
அடுத்து, கொழும்பில்
உள்ள சிறுமியின் தாயாருக்கு இதுதொடர்பாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. தாயார் தனது மகளுக்கு ஏற்பட்ட நிலை தொடர்பாக
புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி புத்தளம் வைத்தியசாலையில்
தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி பொலிஸார்
வலைவிரித்துள்ளனர்.

No comments:
Post a Comment