நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ்
வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (1-10-2015) சர்வதேச சிறுவர் தினம் பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில்
கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு வலய தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப்
பணிப்பாளர் மஹ்பூப் மரிக்கார் பிரதம அதிதியாகவும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம்
அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவி திருமதி ரிஹானா தாரிக் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர். நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி சங்கத்தின் உறுப்பினர் ரஜினி ராஜ் > அஹ்மதியா முஸ்லிம் அமைப்பின்
தேசிய பெண்கள் பிரிவின் அங்கத்தவர்கள்>
மௌலவி அஸ்மத் அஹ்மத்> ஆசிரிய ஆலோசகர் ரிசிஹரன்> அருட் சகோதரிகள்>
பெற்றோர்கள் உட்பட பலர்
இந்நிகழ்வில் பங்கு பற்றினர்.
நிகழ்வில் ஆசிரியர்
பிலீசின் 'சர்வதேச சிறுவர் தினம்'; என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பாடசாலை அதிபர் தலைமை உரையும் > ஆசிரியை வளர்மதி
வரவேற்புரையும்> ஆசிரியை நேசமலர்
நன்றியுரையும் நிகழ்த்தினர். ஆசிரியர்களினதும் மாணவர்களினதும்; கலை நிகழ்ச்சிகள் நிகழ்வில் இடம்பெற்றதுடன்> மாணவர்களுக்கு
அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment